Posts

Showing posts from April 25, 2010

ஜெய்வாபாய் பள்ளியில் நீர் மறுசுழற்சி!

Image
மாணவிகள் குடிநீர் குழாய்களை உபயோகப்படுத்துகின்றனர் ... வெளியாகும் கழிவு நீர் மறுசுழற்சி பாத்தியின் வழியாகச் செல்கிறது .. பாத்தியின் வழியாக கரி, கல்வாழை, மணல் ஆகியவைகளை கடந்து வரும் நீர், அமிலத்தன்மை நீக்கப்பட்டு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அப்படி சேகரிக்கப்பட்ட தண்ணீர் மின் மோட்டார் மூலம், தொட்டியில் ஏற்றப்பட்டு, சாலையோரப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முயற்சியில் ஈடுபட்ட மாணவிகளை பாராட்டி, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர், முனைவர் க.பொன்முடி மாணவிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்குகிறார். (2/03/2010).

நீர் நமது உயிர்! தண்ணீரை வீணாக்காதீர்!!

தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழிக்காதே ! என்பது நான் சிறுவயதில் கிராமத்தில் கேட்ட பழமொழி! தாயைவிட தண்ணீருக்கு ஏன் இந்த முக்கியத்துவம் என்று அன்று தெரியவில்லை! இன்று தெரிகிறது!! எனது பாட்டி ஆற்று நீரைக்குடித்தார்! எனது அம்மா கிணற்று நீரைக்குடித்தார்!! நான் குழாய் நீரைக்குடித்தேன்!!! எனது மகள் பாட்டில் நீரைக்குடிக்கிறாள்!!!! நாளை எனது பேரனும், பேத்தியும்...................? தமிழ் நாடு மூன்று பக்கமும் கடலால் மட்டுமல்ல,ஆந்திரா, கர்நாடகா கேரளா என்ற மாநிலங்களாலு சூழப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீரை வழங்கும் ஆறுகள் எல்லாம்(தாமிரபரணி தவிர) இந்த மாநிலங்களில் உற்பத்தியாவதால் தண்ணீருக்காக அவர்களிடம் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டு இந்தியன் என்ற உணர்வுகள் மறைந்து, இன உணர்வு ஏற்பட்டு விரும்பத்தகாத சண்டைகள் ஏற்படுவதைக்கண்ட போதுதான் கிராமத்தில் கேட்ட பழமொழியின் உண்மை புரிகிறது! தண்ணீரின் மகத்துவம் புரிகிறது! சமீபத்தில் பேருந்தில் திருச்சி செல்லும்போது தாகமாக இரு