Posts

Showing posts from 2011

ஒரிசாவில் ஐந்து நாட்கள் சுற்றுலா...

Image
தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாட்டிற்காக 2005-ம் ஆண்டு டிசம்பர் 25 முதல் 31 வரை புவனேசுவரத்திற்கு தமிழகத்தின் 30 குழந்தைகளை, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அழைத்துச்சென்ற நண்பர்கள் 11 பேருடன் நானும் சென்றிருந்தேன். அங்கே எடுக்கப்பட்ட பூரி ஜக நாதர் கோவில் மற்றும் கோனார்க் கோவில் புகைப்படங்களைப்பார்த்த எனது மனைவி என்னை எப்போது கூட்டிச்செல்வீர்கள் எனக்கேட்டிருந்தார். ஆறுவருடம் கழித்துத்தான் அவரின் விருப்பத்தை , அதுவும் பணி ஓய்வு பெற்ற பின்புதான் நிறைவேற்ற முடிந்தது. தனியாக மொழிதெரியாத ஊருக்கு செல்வது உசிதமல்ல(ஏற்கனவே ஜாலியன் வாலாபாக், வாகா எல்லை சென்ற அனுபவத்தால்) என்பதால் உறவினர்களை கூட்டமாகச்சேர்த்துக்கொண்டு செல்வதுதான் உத்தமம் என்பதால் 11 பேர் கொண்ட எங்கள் குழு சென்ற மாதம் 16-8-2011 அன்று சென்னையில் இருந்து இரவு 12 மணிக்கு ஹவுரா மெயிலில் புறப்பட்டு 17-8-2011 இரவு 9 மணியளவில் புவனேசுவரம் சென்றடைந்தோம்.. அடுத்த நாளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பையும் குறிப்பையும் பாருங்கள்..

நல்லதோர் வீணை செய்தே....

Image
      நல்லதோர் வீணை செய்தே!...

...  புதிய தமிழகரசு பதிவியேற்றவுடன் சுமார் ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தைப்புறக்கணித்துவிட்டது...ஏன்..இது முன்பிருந்த முதல்வர் கருணா நிதியால் கட்டப்பட்டது என்ற ஈகோதான்..புதிய தலைமைச்செயலகம் என்னவாகும்..இன்னும் சில மாதங்களில் பராமரிப்பின்றி வைக்கப்பட்டு செடி கொடிகள், செயற்கை நீருற்றுக்கள் போன்றவைகள் கவனிப்பாரற்று அழியும்...கண்கவர் கலைப்பொருட்கள் , மேஜை நாற்காலிகள் காணாமல் போகும்... ஆக மொத்தம் மக்கள் வரிப்பணம் அத்தனையும் ஒரு முன்னாள் முதல்வர் மீதான வெறுப்பு, தேசத்தின்பொதுச்சொத்தைக்கரையான் பிடித்துபோகச்செய்வதாக இருக்கிறது....
     .இதாவது ஒரு புதிய ஆட்சி வந்ததால் புதிய தலைமைச்செயலகம் புறக்கணிக்கப்பட்டது என்று கூறலாம்..ஆனால் புதிய ஆட்சி வராமலேயே ஒரு இருபது நாள்தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு ஏப்ரல் 13க்குப்பிறகு புதிய தலைமைச்செயலகம் வந்த  முதல்வர் கலைஞர் அவர்கள் அங்கிருந்த மீன் தொட்டியைப்பார்க்கிறார்..பாசம் பிடித்து கிடக்கிறது. உடனே அங்கிருந்த அதிகாரிகளைப்பார்த்து என்ன பராமரிக்க மாட்டீர்களா? என கடிந்து கொள்கிறார்.ரூபாய் ஆயிர…

அழும் குழந்தை சிரிக்கிறது...

Image
திருப்பூரில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெம் ஸ்கூல் ஆப்
எக்ஸ்லென்ஸ் (PEM SCHOOL OF EZCELLENCE)பள்ளிக்கு 20-06-2011 அன்று காலை சென்றிருந்தேன். இப்பள்ளி CBSE திட்டத்தில் செயல்படுகிறது. நமது காலத்தில் எல்லாம் ( 25 வருடமுன்பு)ஐந்து வயது முடிந்தவுடன் தான் பள்ளியில் சேர்ப்பார்கள். அதுவும் வலது கையால் இடது காதைத்தொட வேண்டும்..ஆனால் இப்போது...
மூன்று வயது முடிவதற்குள்ளேயே முதலில் PRE K.G.,அப்புறம்  L.K.G. பின் U.K.G, எனப்படித்து வந்தால் தான் ஒன்றாம் வகுப்பில் சேரவே முடியும்..
அம்மா மடியில் மழலை பேசி விளையாடும் குழந்தையை பள்ளியில் சேர்த்தவுடனேயே அழ ஆரம்ப்பித்து விடுகிறது..தாயைப்பிரிகிற சூழல்
மட்டுமல்ல, தான் ஓடியாடி விளையாடிய பழகிய இடத்திற்குப்பதிலாக , பள்ளிச்சூழல் மாறுபட்டு இருப்பதால், பயந்து போய் அழ ஆரம்பித்துவிடுகிறது.
 குழந்தைகளுக்கு பறவைகளை மிகவும் பிடிக்கும்.எனவே பள்ளியில் வண்ணப்பறவைகளை வைத்து பராமரிக்கவேண்டும்.
மழலையர் பள்ளிகளில் ஊஞ்சல், சறுக்கு போன்றவற்றை அமைப்பதன் மூலம் குழந்தைகளின் வீட்டு நினைப்பை மாற்றி ,பிற குழந்தைகளோடு விளையாடும் எண்ணத்தை ஏற்படுத்தினால் பள்ளிச்சூழலுக்கு குழந்தைகள் சில…

சரசுவதிக்கு கோவில் கட்டுவோம்...

Image
மலர்க்கொடிகளின் வேர்களுக்கு....


திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒரு ஆக்கபூர்வமான அதிசயமான 32 புதிய வகுப்பறைகளுக்கான கிரஹப்பிரவேசம் 8-6-2011 அன்று நடைபெற்றது...அவர்களுடைய அழைப்பிதழில் யாருடைய பெயரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை....யார் அழைக்கிறார்கள் என்ற இடத்தில்,
மலர்க்கொடிகளின் வேர்களுக்கு   நீர் ஊற்றும் சேவகர்களாகவும்,   காத்து நிற்கும்     காவலர்களாகவும்...  தலைவர் மற்றும் உறுப்பினர்கள்  பள்ளி வளர்ச்சிக்குழு
என்று மட்டுமே போட்டிருந்தார்கள்.. எனக்கும் அழைப்பிதழ் வந்தது…. காலை 6 மணிக்கு பள்ளிக்குப்போனேன்...அங்கு நான் கண்டது... கலையரசி படத்திலே எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு பாட்டுப்பாடுவார்..அது அதிசியம் பார்த்தேன் மண்ணிலே...அது அப்படியே நிக்குது என் கண்ணிலே.. என்று வரும்..அது போலத்தான்...எனக்கும் பாடத்தோன்றியது... பள்ளியின் பிரம்மாண்டமான தோற்றத்தைப்பார்த்து...
அட! இதென்ன பிரமாதம் என்கிறீர்களா?.தனியார் பள்ளிகளைப்பார்த்த கண்களுக்கு இது அதிசயமாகப்படாதுதான்!.ஆனால்  இந்த பள்ளியின் பழைய(2003) தோற்றத்தைப்பார்த்த எனக்கு அதிசயமாகத்தான் பட்டது! இப்பள்ளியின் பழைய தோற்றத்தின் சிறு பகு…