அரசுப்பள்ளிகளில் விலையில்லா மடிக்கணணிகள்....

    திருப்பூர்   ஜெய்வாபாய் பள்ளியின் 1101-மாணவிகளுக்கு மடிக்கணணி....

 திருப்பூர் ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 2011-12-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு பயின்ற 1100 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணணி வழங்கும் விழா 21-7-2012 அன்று மதியம் 12  மணியளவில் நடைபெற்றது..விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர்  ஆர்.கஜலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.  விழா புகைப்படக்காட்சிகள்...


 

மேடையில் வைக்கப்பட்ட விழா பற்றிய பேக் ட்ராப்..

கலையரங்கத்தில் அமர்ந்துள்ள 2011-12-ல் அ12-ம் வகுப்பு பயின்ற  ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் ஒரு பகுதி.




 மாண்புமிகு தமிழக இந்து அற நிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களை வரவேற்க காத்திருக்கும் பள்ளி பேண்ட் வாத்தியக்குழு மாணவிகள்.



மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வி.ஐ.பி. சல்யூட் .



 மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு முதமைக்கல்வி அலுவலர் நா.ஆனந்தி அவர்கள் கல்வித்துறையின் சார்பாக புத்தகம் வழங்கி வரவேற்கிறார்



திருப்பூர் மா நகராட்சி துணை மேயர் திருசு.குணசேகரன் அவர்களுக்கு புத்தகம் வழங்கப்படுகிறது..





 முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருமதி. நூர்மாலிக் அவர்கள் விழாவினை கவனிக்கிறார்.


ஜெய்வாபாய் பள்ளியின் கலையரங்க மேடை மிகப்பிரம்மாண்டமானது. விழாவானது அதைவிடப்பிரம்மாண்டமானது.ஏனென்றால் தமிழகத்திலேயே இப்பள்ளியில் மட்டுமே  1100 மாணவிகளுக்கு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மடிக்கணணி வழங்கப்படுகிறது...மேடையின் பேக் ட்ராப் இன்னும் பெரிதாகவும், விழா மேடையில் உட்காருபவர்களின் த்லைக்கு மேலாக எழுத்துக்கள் தெரியும்படி மேலே தூக்கி அமைத்திருந்தால் இன்னும் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.. மேடையில் வீற்றிருப்பவர்கள் உட்கார்ந்தவுடன்  மாண்புமிகு தமிழக முதல்வரின் பெயர் மற்றும் விபரம்  மறைக்கப்பட்டு விட்டது...உயரமான மேடைக்குக்கீழே அமர்ந்திருப்பவர்களுக்கு மேடையின் பேக் ட்ராப் தெரியவாய்ப்பில்லை. 



ஜெய்வாபாய் பள்ளியின் முன்னாள் மாணவி நந்தினி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த விழாவினைக்காண வருகை புரிந்தார்.



விழாவிற்கு தலைமை தாங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கஜலட்சுமி அவர்கள், தமிழக முதல்வர் மாணவிகளுக்கு வழங்கியுள்ள மடிக்கணணியை ஆக்க பூர்வமாகப்பயன்ப்டுத்த வேண்டும் என்றும், ஃபேஸ் புக் பக்கம் போய் தங்கள் பொன்னான நேரங்களை வீணாக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். 



விழாவில் உரையாற்றிய வணக்கத்திற்குரிய திருப்பூர் மா நகர மேயர் திருமதி அ.விசாலாட்சி அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடுபடுகிறார், உங்களுக்காகவே சிந்திக்கிறார் என்றார். இவருடைய உரையில் ஜெய்வாபாய் பள்ளியின் வரலாற்றைக்கூறிய போது மாணவிகள் கண்கலங்கினர்..இவருடைய உரை மாணவிகளைக்கவர்ந்தது...மிகச்சிறந்த பேச்சாளர் அல்லவா?



மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசும்போது, கொஞ்ச நேரம் முன்பு பிசப்பள்ளியில்  நான்கு பள்ளிகளைச்சேர்ந்த 1115 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணணிகள் தந்தோம்...ஆனால் இங்கு இந்த ஒரு பள்ளியில் மட்டும் 1101 மாணவிகளுக்கு தரப்படுகிறது..மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..ஜெய்வாபாய் பள்ளிக்கு மட்டும் 144 புதிய ஆசிரியைகள் நியமிக்கப்பட உள்ள்னர் என்ற செய்தியை  கூறிய போது அரங்கமே அதிர்ந்தது....

ஜெய்வாபாய் பள்ளியின் 12-ம் வகுப்பில் பயின்ற 1101 மாணவிகளுக்கும் தரமுடியாத காரணத்தால், 12-ம் வகுப்பில்  முதல் 4 இடங்கள் பெற்ற 5 மாணவிகளுக்கு அமைச்சர் அவர்கள் மடிக்கணணிகளை வழங்கினார்.


 மாணவிகள் சார்பாக செல்வி செந்தூர்ப்பிரியா மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

                  

Comments

  1. Replies
    1. ஜெய்வாபாய் பள்ளியின் மாணவிகளுக்கு தரப்பட்ட கணணிகளின்ன் மதிப்பு ரூ. ஒரு கோடியே பத்துலட்சமாக இருக்கும். இந்த பணத்திற்கு இப்பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் ஸ்மார் கிளாஸ் என்கிற கணணி வழி மூலம் கல்விகற்பதை அமுல்படுத்தியிருக்கலாம்..அல்லது அனைத்து வகுப்பறைகளிலும் இருக்கை வசதிகள், கழிப்பறைகளை கிரைனட்டில் மாற்றியிருக்கலாம், கலையரங்கத்தில் உள் விளையாட்டு அரங்கத்தைஏற்படுத்தியிருக்கலாம்..இது வருங்கால தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும்...

      Delete
    2. Exactly...I feel it is waste of money...buying more computers doesn't mean any improvements, how well it can develop technology and education is important...

      Delete

Post a Comment

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..