Posts

Showing posts from February 19, 2012

நூறு சத தேர்ச்சியும்..மிதிபடும் மாணவர்களும்.....

Image
                             யாரைக்குறை கூறுவது?    தமிழக கல்விக்கூடங்களில் என்னதான் நடக்கிறது? மாணவர்களுக்கு என்னவாயிற்று?  சென்னையில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியையே.. வகுப்பறையில் கத்தியால் குத்திக்கொள்கிறார்..உடுமலைப்பேட்டையிலோ ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியரின் அடிதாங்காத 11-ம் வகுப்பு மாணவர் 3 கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்...அதே சென்னையில் ஒரு கல்லூரி மாணவர் தனது தோழியை நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த செய்தியும் வருகிறது.. இச்செய்திகள் கல்வியாளர்களையும், சமூகவியலாளர்களையும் , ஆசிரியர்களையும், ,பெற்றோர்களையும் அதர்ச்சியடையச்செய்துள்ளது. .                  பூவைப்போல தூவப்படவேண்டிய கல்வி-இங்கு               ஆணியைப்போல அறையப்படுகிறது.. என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் வைரவரிகள் நிஜம் என்பதை பறைசாற்றுகின்றன..                 1996-க்குப்பிறகு புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக கல்வி வெகு விரைவாக தனியார் மயமாகியது..சாராய வியாபாரிகள் கையில் கல்விக்கடவுள் சரசுவதியும், அரசின் பாக்கெட்