Posts

Showing posts from February 23, 2014
Image
.       ஜெய்வாபாய் பள்ளிக்கு நன்றி சொல்லும் நேரமிது.                               (A.ஈசுவரன் தலைவர், பெற்றோர்-ஆசிரியர் கழகம்..) அன்புடையீர் வணக்கம்.          1937-ம் ஆண்டு திருமதி ஜெய்வாபாய் என்ற பெண்மணி(இறக்கும் தறுவாயில்) திருப்பூரில் பெண்களுக்கென்று பள்ளி வேண்டுமென்று விருப்பப்பட்டார். தனது மனைவியின் விருப்பத்தை கணவர் D.O.ஆஷர் 1942-ல் நிறைவேற்றினார். திருமதி ஜெய்வாபாயின் பெண் கல்விக்கனவு நிஜமாகியுள்ளது. இந்தியாவிலேயே 7200 மாணவிகள் படிக்கின்ற மாபெரும்  மாநகராட்சிப் பெண்கள் பள்ளியாக பல்வேறு சாதனைகளைப்படைத்து ஜெயக்கொடி நாட்டி வருகிறது.            1989-ம் ஆண்டு எனது மகளை இப்பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்தபோது பள்ளியின் நிலையென்ன? அன்று மாணவிகளின் எண்ணிக்கை 3008. பள்ளியின் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டுக்கிடந்தது. அடிப்படை வசதிகளான குடி நீர், கழிப்பறைகள், கிணற்று நீர், வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் போன்றவை இல்லை. பன்றிகள் உலாவும் இடமாக பள்ளி வளாகம் காட்சியளித்தது. வேலியில்லாத பயிர் நாசம் என்பதை போலவே கண்காணிப்பும், பராமரிப்பும் இல்லாத பள்ளியும்!