மாண்புமிகு தமிழக முதல்வர் பாராட்டிய நகராட்சிப்பள்ளி...


     நமக்கு  ஏற்படும் பிரச்சனைகள்தான் அதைத் தீர்ப்பதற்கான வழி வகைகளைக்காணவும், அதற்கான தீர்வை நோக்கிச்செல்லவும், யோசிக்கவும் வைக்கிறது.  திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5000-ம் மாணவிகள் கல்வி கற்றனர்.  டாய்லெட்டிற்கு கிணற்றுத்தண்ணீர் போதுமானதாக இல்லை! கோடை காலங்களில் கிணறு வற்றிவிடும்!டாய்லெட்டை சுத்தமாக வைப்பதில் பிரச்சனையேற்பட்டது. தண்ணீர் இல்லாத காரணத்தால் மாணவிகள் டாய்லெட்டை உபயோகப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது!.  என்ன செய்வது? கிணற்றுக்குள் போர்போட அருகில வசிக்கும் மக்கள், தங்கள் பொதுக்கிணற்று போர்குழாயில் தண்ணீர் வற்றிவிடும் என்று போர்போட அனுமதிகவில்லை..என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு எங்களுக்குக் கிடைத்த விடை, நமது முன்னோர்கள் மழை நீரை சேமிக்க உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் ஞாபகத்திற்கு வந்தன.
       
      மழை பெய்யும் போது பள்ளியின் மைதானத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் பள்ளியின் மேற்குப் பகுதியின் வழியாக வெளியேறி அருகில் உள்ள ஓடையில் கலந்து நொய்யல் ஆற்றிற்குச்சென்று விடுகிறது. பள்ளியில் பெய்யும் மழை நீர் முழுவதையும் சேகரிக்க விரும்பினோம். எனவே ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளியில் பெய்யும் மழை நீர் முழுவதும் ஒன்றுசேர்ந்து வெளியேறும் பகுதியில் ஒரு சிறிய ஏரியை (3 லட்சம் லிட்டர் கொள்ளளவு) மாணவிகளுடன் உதவியுடன் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் உருவாக்கினோம்
           2000ம் ஆண்டு அக்டோபரில் பெய்த வட கிழக்குப் பருவமழையால் ஏரி 4 முறை நிரம்பியது.  காய்ந்து கிடந்த பள்ளிக்கிணறு இருபது அடி வரை தண்ணீர் ஊறியது.  இதனால் எங்களது தண்ணீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டோம். அது மட்டுமல்ல ..அதுவரை உப்பு நீராக இருந்த கிணற்று நீர் சப்பை நீராக மாறியதை ஆய்வுமூலம் கண்டோம்.  இதனால் உத்வேகம் அடைந்த எம் பள்ளி மாணவிகள்( தமீம் சுல்தானா குழுவினர்) இதையே தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கசிவு நீர் குட்டையின் மூலம் ஜெய்வாபாய் பள்ளியில் மழை நீர் சேமித்தல் என்ற தலைப்பில் ஆய்வைச்சமர்பித்தனர். இந்த ஆய்வு அகில இ ந்திய மாநாட்டிலும்(2000 கல்கத்தா), இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டிலும் கலந்து(2001 டெல்லி)கொள்ளும் பெருமையைப்பெற்றது.  மேலும் மத்திய மாநில அரசுகளின் நீர் வளத்துறை உயர் அதிகாரிகள் எங்கள் ஆய்வைக்கேள்விப்பட்டு இம்மாணவிகளைப்பாராட்டினர். தமிழகரசின் சைன்ஸ் சிட்டியின் பரிசையும் இம்மாணவிகள் பெற்றனர்.
      அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாலிதா அவர்கள் இம்மாணவியை அழைத்து ரூ.ஐய்யாயிரம் பரிசு வழங்கியதை , நானும், ஜெய்வாபாய்பள்ளி மாணவிகளும் பெரும் பேராகக்கருதிகிறோம். எனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மாணவி தமீம் சுல்தானாவுடன் செல்ல அவருடைய அத்தைக்கு அந்த பாக்கியம் கிடைத்தது..

         மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் 2002--ம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற புதிய திருப்பூர் மேம்பாட்டுத்திட்டதைத்துவக்கி வைக்க வருகிறார்..குமரன் கல்லூரி அருகே 





பொதுக்கூட்டம்..லட்சக்கணக்கான் மக்கள் மத்தியில் பேசுகிறார். அவர் பேச்சின் ஊடே ஜெய்வாபாய்பள்ளி மாணவிகளுக்கு பரிசளித்ததைப் பெருமையாகக்கூறுகிறார். ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர்கள் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஒரு அரசுப்பள்ளியைப்பற்றி புகழ்ந்து பேசியது வரலாற்றில் முதல் முறையாக இருக்கும் என நினைக்கிறேன். (பார்க்க:வீடியோ..புகைப்படம் மற்றும் பத்திரிக்கைச்செய்தி). 






  அதன் பின்பு கட்டாய மழை நீர் சேகரிப்பை தமிழகத்தில் அமுல் படித்தினார் என்பதை நாம் அறிவோம். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, மாணவியர் எண்ணிக்கை 7300 ஆக உயர்ந்தபோதும் பள்ளிக்கிணறு இதுவரை வற்றவில்லை என்பது மழை நீர் சேகரிப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும். இதுமட்டுமல்ல கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பின் பயனாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்பது அம்மா அவர்களின் திட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்..

         ஏரி, குளம், குட்டைகளைக்கட்டி மழை நீரை நமது முன்னோர்கள் சேகரித்தார்கள்..வருங்காலத் தலைமுறைக்குத் தண்ணீர் வேண்டுமானால், இன்றைய தலைமுறையினராகிய நாம் ஏரி, குளம்,குட்டைகளைப்பாதுகாக்கவேண்டும்., மழை நீரைச்சேகரித்து, மனித குலம் காப்போம்....

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..