நமது வாரிசுகளைக்காப்பாற்ற வேண்டுமா?

      நமது வாரிசுகளுக்காக பூமியைக் காப்போம்!

சுற்றிச்சுழலும் பூமி! உன்னை சூடு படுத்தியது யாரு!

சுற்றிச்சுழலும் பூமி! உன்னை சூடு படுத்தியது யாரு?
மரங்களை வைத்து
குளிர்விக்கிறோம் பாரு.! நீ சந்தோசமாக சுழன்றாடு!

கவலைப்படாதே மரமே! தண்ணீர் ஊற்ற நாங்கள் இருக்கிறோம்.

.

திருப்பூர் மாவட்ட கல்வித்துறையின் சார்பாக 6000-ம் மரங்கள் நடும்

விழா! 15-09-2010 ஜெய்வாபாய் பள்ளியில்பேரரிஞர் அண்ணா பிற ந்த நாள் அன்று ஆரம்பம்..

மனித குலம் காக்க மரம் வளர்ப்போம்!

இ ந்த உலகில் உள்ள நாம் ஒவ்வொருவரும் ஓடி ஓடிச்சம்பாதிப்பது எதற்காக?,அழகான வீடுகள் கட்டுவதும், நிலங்களை வாங்கிப்போடுவதும், கோடி கோடியாக சம்பாதித்து வங்கிக்கணக்கை வீங்கவைப்பதும் எதற்காக?அரண்மனை போன்ற வீடுகளில் நமது குழந்தைகள் வாழவேண்டும்,ஆடம்பரக்கார்களில் பவனி வரவேண்டும்,பத்து தலைமுறைக்கும் நமது வாரிசுகள் கவலையின்றி இப்பூமியில் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரும் முடியும் மட்டும் சொத்து சேர்த்து வைக்கவே விரும்புகிறோம். உண்மையிலேயே நமது குழ ந்தைகள் மீது அக்கறை இருக்குமானால ,அவர்களுடைய எதிர்கால வாழ்வு நோய் நொடியின்றி சிறப்பாக இருக்கவேண்டுமானால் நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லவேண்டியது காசு, பணமோ,சொத்து பத்துகளோ அல்ல! மாறாக மாசற்ற பூமியைத்தான் விட்டுச்செல்லவேண்டும். சென்ற தலைமுறை நமக்கு விட்டுச்சென்ற பூமியை நமது பேராசையின் காரணமாக வாழத்தகுதியற்ற பூமியாக மாற்றிவிட்டோம்..மாசுபட்ட பூமியை மாசற்ற பூமியாக மாற்றி நமது வாரிசுகளுக்கு கொடுக்கவேண்டாமா? அதற்கு ஓர் எளிய வழி மரங்களை வளர்ப்பதுதான்.

ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மரம் நடு வைபவத்தைப்பார்வையிடுகிறார் முதன்மைக்கல்வி அலுவலர் திரு. மு.ராஜேந்திரன் அவர்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர் திரு.மு.ராஜேந்திரன் அவர்கள் மரம் நடுகிறார்.

சூல் கொண்ட மேகங்கள் கால் கொண்டு இறங்கிட

மரகதப்படிகளாம் மரங்கள்!

அது நமக்கு......

சுவாசிக்க காற்று

உண்ணக்கனி

ஒதுங்க நிழல்

குடியிருக்க வீடு

அடைக்கக் கதவு

தடவத்தைலம்

தாளிக்க எண்ணெய்

எழுதக் காகிதம்

எரிக்க விறகு

மரம் தான்.. மரம் தான்..

எல்லாம் மரம் தான்!

பெம் ஸ்கூல் பள்ளி மாணவிகள் மரம் நடுகின்றனர்.

என உணர்ந்த திருப்பூர் மாவட்ட கல்வித்துறையும், கிரீன் என் கிளீன் அமைப்பும்,தேசிய பசுமைப்படை அமைப்பும் 16-9-2010 அன்று ஓசோன் தினத்தை முன்னிட்டு ,திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ நகராட்சி/மெட்ரிக் பள்ளிகளில் அப்பள்ளியின் மாணவர்களைக்கொண்டு 6000-ம் மரங்களை கிரீன் என் கிளீன் அமைப்பு மூலம் பெற்று அவைகளை பள்ளிகளில் நட்டு பராமரிக்கத்தொடங்கியுள்ளனர்.இதற்கான மரம் நடும் விழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு. ராஜேந்திரன்,திரு.ஆ.செந்தில்,திரு.வேல்முருகன் சுற்று சூலல் மாவட்ட திட்ட அலுவலர்,திரு.ஆ.ஈசுவரன் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் அவர்களும்,பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸில், கிரீன் என் கிளீனின் தலைவர் திரு.ஆ.செந்தில்,செயலர் திரு.ரவி மற்றும்,அரிமா சங்கத்தலைவர் திரு.வெ.சம்பத்தும் தொடங்கிவைத்தனர். பெம் பள்ளியில் பயிலும் 210 குழந்தைகளும் ஆளுக்கொரு மரம் வைத்து அவர்களே பராமரிப்பை மேற்கொள்வது சிறப்பானதாகும்.பெம் பள்ளியில் மரங்களை வைத்த குழந்தைகள்

சுற்றிச்சுழலும் பூமி உன்னைச்சூடு படுத்தியது யாரு...
மரங்களை வைத்து குளிர்வித்து தருகிறோம் பாரு
நீ ச ந்தோசமாகச்சுழன்றாடு!

எனப்பாடியதைக்கேட்ட வருணபகவான் மாலையே தூறல் போட்டு மழை நீர் சேகரிப்பை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார்.

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..