Posts

Showing posts from April 4, 2010

மாண்புமிகு தமிழக முதல்வர் பாராட்டிய நகராட்சிப்பள்ளி...

Image
     நமக்கு  ஏற்படும் பிரச்சனைகள்தான் அதைத் தீர்ப்பதற்கான வழி வகைகளைக்காணவும், அதற்கான தீர்வை நோக்கிச்செல்லவும், யோசிக்கவும் வைக்கிறது.  திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5000-ம் மாணவிகள் கல்வி கற்றனர்.  டாய்லெட்டிற்கு கிணற்றுத்தண்ணீர் போதுமானதாக இல்லை! கோடை காலங்களில் கிணறு வற்றிவிடும்!டாய்லெட்டை சுத்தமாக வைப்பதில் பிரச்சனையேற்பட்டது. தண்ணீர் இல்லாத காரணத்தால் மாணவிகள் டாய்லெட்டை உபயோகப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது!.  என்ன செய்வது? கிணற்றுக்குள் போர்போட அருகில வசிக்கும் மக்கள், தங்கள் பொதுக்கிணற்று போர்குழாயில் தண்ணீர் வற்றிவிடும் என்று போர்போட அனுமதிகவில்லை..என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு எங்களுக்குக் கிடைத்த விடை, நமது முன்னோர்கள் மழை நீரை சேமிக்க உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் ஞாபகத்திற்கு வந்தன.               மழை பெய்யும் போது பள்ளியின் மைதானத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் பள்ளியின் மேற்குப் பகுதியின் வழியாக வெளியேறி அருகில் உள்ள ஓடையில் கலந்து நொய்யல் ஆற்றிற்குச்சென்று விடுகிறது. பள்ளியில் பெய்யும் மழை நீர் முழ